“அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை”கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் 18.6.2023 ஞாயிற்றுக்கிழமை காலை “ஏகாம்பரம் விளையாட்டு மைதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கரவை.மு.தயாளன் அவர்களின் நூல்களின் வெளியீட்டு விழா கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூத்த ஊடகவியலாளரும் தி/விவேகானந்தா கல்லூரி முன்னைநாள் அதிபருமான திருமலை நவம் அவர்களும் சிறப்பு அதிதியாக திருகோணமலை செலான் வங்கியின் முகாமையாளர் ச.ஹரித்வர்ணன் அவர்களும் முதற்பிரதியை பெற்றுக்கொண்ட திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் வேலையா சதீஸ்குமார் அவர்களும் நிகழ்வை சிறப்பிக்க, கரவை மு.தயாளனின் நூல்கள் மீதான நூல் நோக்கை விரிவுரையாளரும் எழுத்தாளருமான முருகையா.சதீஸ்(எதிரொலி),ஓய்வுநிலை ஆசிரியரும் எழுத்தாளருமான ராணி சீதரன்(வின்னி மண்டேலாவின் வாக்குமூலம்),எழுத்தாளர் பிரம்மியா சண்முகராஜா (இது புதிய ஆரம்பம்),ஊடகவியலாளரும் எழுத்தாளருமான பிரியமதா பயஸ் (இதிகா) ஆகியோர் சிறப்புற வழங்கினார்கள்.

நிகழ்வை தொகுத்து வழங்கிய கலாச்சார உத்தியோகத்தரும், கலை இலக்கியச் செயற்பாட்டாளருமான் வி.குணபாலா ஆகியோருக்கும் நிகழ்வினை சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகளை வழங்கிய கலை இலக்கியச் செயற்பாட்டாளர் பானு சுதாகரனுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது கலை இலக்கியச் செயற்பாடுகளில் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மனமகிழ்வடைகிறேன்.