அன்பின் பாதை சமூகத்தின் மாதர்களை கௌரவிக்கும்நிகழ்வான “பெண்மையைப் போற்றுவோம்-2024” 20:04:2024 சனிகிழமை திருகோணமலை நகாராட்சி மன்ற கேட்போர் மண்டபத்தில் காலை.10:00 க்கு ஆரம்பமானது.அன்பின் பாதை றொசில்டா அன்டோ தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்……ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த ஆன்மாக்களின் சாந்திக்காக மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.சிறப்பு விருந்தினராக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி.அருட். கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் அவர்களும், திரு.நா மணிவண்ணன் முதலமைச்சரின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி.மைதிலி சேகரன். திருகோணமலை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி திருமதி.சித்திராஞ்சலி நவநீலராஜா அருட்பணி கிங்சிலி றொபட் அவர்களும் கலந்து சிறப்பித்திரு்தனர். அன்னையரை போற்றி அவர்களின் சாதனைகளை புத்தகவடிமாக்கி மகிழ்வித்த அன்பின் பாதை சமூகம் பெருமை கொள்கின்றது.