திருகோணமலையில் கலை இலக்கிய செயற்பாடுகளில் தம்மை வெளிக்கொணர ஆர்வமுள்ள கலைஞர்களை, படைப்பாளர்களை தரணியெங்கும் அறியும்வண்ணம் அவர்கள் படைப்புக்களை கொண்டுசெல்வதே எமதுஉளமார்ந்த செயற்பாடாகும்.

2021 ஆடி மாதம் திருகோணமலையின் மூத்த இலக்கியவாதிகளின் வாழ்த்துக்களுடன் ஆரம்பமான எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றமானது சமூக சேவை அமைப்பான அன்பின் பாதை சமூகத்தின் ஓர் அங்கமாகும்.

பௌர்ணமி நிகழ்வுகள், இலக்கிய உரையாடல்கள், நூல் ஆய்வுகள், நூல் அறிமுகம்,நூல் வெளியீடு, போட்டி நிகழ்வுகள் என பல கலை இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி வருகிறோம்.தொடர்ந்தும் அனைத்து கலைஞர்களையும் இணைத்து கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

திருகோணமலை கலை இலக்கிய வளர்ச்சிக்கு தங்கள் மேலான பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்.

திருகோணமலை.

நிர்வாக இயக்குனர்கள்

கனக.தீபகாந்தன்

றொசில்டா அன்டோ

DESIGNED WITH LOVE BY http://studiowhitefox.com
Back to Top