“அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரவை. மு.தயாளனின் “வாழ்வு சுமந்த வலி” நூல் வெளியீட்டு விழா 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 – 5.50 வரை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம விருந்தினராக இலக்கியவாதியும் மேனாள் வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளருமான திரு முத்து இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் நிலாவெளியூர் கெஜதர்மா, ஊடகவியலாளர் வாசல் வாசகர் லட்டத்தின் செயலாளர் ச.திருச்செந்தூரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் நூலின் முதற்பிரதியை வைத்தியர் சி.ஹயக்கிரிவன் (இயக்குனர் -தளம்) பெற்றுக்கொண்டார்.

நூலின் திறணாய்வை இலக்கியத் திறணாய்வாளர் திரு.வ.முரளிதரன் அவர்கள் சிறப்புற வழங்கினார்.

நூலாசிரியர் சார்பில் சிறுகதை மஞ்சரியின் உதவி ஆசிரியர் செல்வி சரண்யா தனபாலசிங்கம் ஏற்புரைதனை வழங்கானார்.

நிகழ்வினை திறம்பட செல்வி அபிநயா ரகுராம் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய வட்ட ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.

ஔிப்பட உதவி; செல்வன் ரகுராம் அபிஷிகன்♥