கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்களின் “மாகாவலியின் மைந்தன் சிறுவர் நாவல் வெளியீட்டு விழாவானது திருகோணமலை அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் திருகோணமலை நகராட்சிமன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் காலை 07. 04.2024 காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வினை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையேற்று நடாத்தினார்.கிழக்கு மாகாண முன்னைநாள் கல்வி அமைச்சர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.நூலின் முதற்பிரதியை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி க.விஜயகுமார் அவர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.மேலும் நிகழ்வில் வரவேற்புரைதனை அன்பின் பாதை றொசில்டா அன்டன் வழங்கினார்.வெளியீட்டுரையை மகுடம் வி.மைக்கல் கொலின் வழங்கினார்.மகவலியின் மைந்தன் நூல் மீதான விமர்சனவுரைதனை திருகோணமலையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வினை கவிஞர் க.யோகானந்தன் அவர்கள் சிறப்புற தொகுத்து வழங்கினார்.கேணிப்பித்தன் அருளானந்தம் அவர்களை கவிஞர் கௌரிதாசன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்து வாழ்த்துப் பாமாலை சூட்டினார்.நிகழ்வின் சிறப்பம்சமாக கவிஞர் லலிதகோபனின் புதல்வன் நூலின் வாசிப்பின் பகிர்வினை சிறப்பாக வெளிப்படுத்தினார்,அத்துடன் தான் எழுதிய ஆங்கில கதை ஒன்றையும் பகிர்ந்தார். இங்கு வருகைதந்த வாசிப்பில் நாட்டமுள்ள பத்து மாணவர்களுக்கு சிறுவர் நாவல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.நிகழ்வில் அரங்கு நிறைந்த இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் நிகழ்வின் இறுதிவரை கலையாதிருந்தமை மகிழ்வைத் தந்தது. எம் நிகழ்வினை அழகுற ஔிப்படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவுசெய்த அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு.அருணண் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

See insights