அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடான எழுத்தாளர் அ.வ.முஹ்சீன் எழுதிய இளையோர் நாவலான “காணாமல் போன கன்சுல்” நூல் வெளியீட்டு விழாவானது 27.04.2024 மாலை 4.00- 6.00 மணிவரை திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில் இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.எண்ணம்போல் வாழ்க்கை கனக தீபகாந்தன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.பிரதம விருந்தினராக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழிக் கற்கைகள் துறைப் பேராசிரியர் A.F.M.அஷ்ரப் அவர்களும்..சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.அம்.கௌரிதாசன் அவர்களும்திருகோணமலை வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்(தமிழ்) திரு.அ.ரவீந்திரன் அவர்களும்.. கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நூல் திறனாய்வை மேனால் வடமாகாண கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான திரு முத்து இராதாகிருஷ்ணன் அவர்களும்நூலின் வாசிப்பின் பகிர்வினை தி/புனித சூசையப்பர் கல்லூரி மாணவன் மா.மாதேஷ் சுவைபடத் தந்தனர்.நிகழ்வினை செல்வி அபிநயா ரகுராம் தொகுத்து வழங்கினார்.நூலாசிரியர் ஏற்புரைதனையும் நன்றியுரையும் வழங்கினார் ..குறிப்பாக நூலினை அச்சிட்டு வெளியிட்டுத்தந்த பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் பணிப்பாளரிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்ததுடன் நூலின் வெளியீட்டு நிகழ்வை சிறப்புற நடாத்திய எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் மற்றும் நகரசபை நூலக நிர்வாகத்த்தினருக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வை வெகுசிறப்பாக்கிய ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இளையோருக்கான இந்நாவல் திருகோணமலை நகர பாடசாலை மாணவர்கள்,சீனன்குடா,மூதூர்,இரால்குழி ஆகிய பல பாடசாலை மாணவ ஆசிரியர்களுக்கு இந்நூல் சென்றடைந்தமை சிறப்பம்சமாகும்.

இளையோருக்கான இலக்கியம் தொடர்ந்தும் வெளிவரவேண்டும்…