ஜீவநதி வெளியீட்டில் உருவான அஷ்வினி வையந்தியின் “யாவும் ஆனந்தமே” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வானது நேற்றய தினம் (12.02.2023) காலை வெகு சிறபாக நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து கலை இலக்கிய படைப்பாளர்கள்,ஆர்வலர்கள்,நண்பர்கள் அனைவரிற்கும் மனமார்ந்த நன்றி.

எமக்கு மிகச் சிறப்பான பொது நூலக கேட்போர் கூடத்தை ஒழுங்கமைத்துத் தந்த நூலகர் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கும், நண்பன் ஜெயபிரகாஷ் ஆகியோரிற்கும் நிகழ்வின் அழைப்பை பத்திரிகைகளில் பிரசுரித்து தந்த நண்பன் அச்சுதன் மற்றும் யதுராஜ் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எமது நிகழ்வை நேரலை செய்த தம்பி மயூரன் மற்றும் அழகாக ஔிப்படமெடுத்து எம்மை மகிழ்வித்த அருணன் மீனாட்சிசுந்தரம் அவர்கட்கும் மிக்க நன்றி.

எமக்காக இனிய பாடலை தந்த சகோதரி தசோதா மற்றும் எம்மோடு பார்வையாளர்களை உபசரித்த திருமதி புவனா ஆகியோருக்கும் நன்றி.

என் அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கெண்ட என் பள்ளித் தோழமைகளுக்கும் அருட் தந்தைக்கும் மனமார்ந்த நன்றி.

மேலும் நிகழ்வில் கலந்து கொள்ள இயலாது எமை வாழ்த்திய நட்புகளுக்கும் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும், எழுத்தாளர் அஷ்வினி வையந்தியின் உறவினர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் செயற்பாடுகளிற்காக என்றும் தோள்கொடுக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.