ஜீவநதி வெளியீட்டில் உருவாகிய “யாவும் ஆனந்தமே” என்னும் கவிதை நூல் மூலம் களம் காணும் திருக்கோணமலை கங்குவேலியை சேர்ந்த அஷ்வினி வையந்தி(சிவரூபினி) என்னும் இளம் படைப்பாளர் தனது தொடர் எழுத்தாளுமையால் இலக்கிய பரப்பில் அறிமுகமானவர்.

வீரகேசரி,ஈழநாடு,தினக்குரல்,வானவில்,மித்திரன்,தமிழன்,காலைக்கதிர் போன்ற பத்திரிகைகளிலும் ஞானம்,நடுகை,நீங்களும் எழுதலாம்,சிறுகதை மஞ்சரி,தாய்வீடு,எங்கட புத்தகங்கள்,ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் ஆரையம்பதி, பெண்மை போன்ற இணையத்தளங்களிலும் கவிதை, சிறுகதை,கட்டுரை,நூல்விமர்சனம் போன்ற இலக்கிய வடிவங்களில் எழுதி வருகிறார்.

கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்று கிளிவெட்டி மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வியை முடித்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாச்சார பீடத்தில் தமிழை விசேட கற்கைநெறியாகக் கற்று தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்.

தனது மண்ணுக்கும் மொழிக்கும் பெருமைசேர்க்கும் சகோதரியின் நூலை எமது “அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றத்தினூடு அறிமுகம் செய்வதில் பெருமையடைகிறோம்.