மகுடம் கலை இலக்கிய வட்டம், அனாமிகா பண்பாட்டு மையம்,அன்பின்பாதை சமூகத்தின் எண்ணம் போல் வாழ்கை கலை இலக்கிய மன்றம் இணைந்து நடாத்திய பேராசிரியர் கைலாசபதியின் 40வது ஆண்டு நினைவாக.. என்றென்றும் கைலாசபதி சிறப்பு நூல் வெளியீடு..!

திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.55 இற்கு ஆரம்பித்து 5.45 வரை நடைபெற்றது. நிகழ்வினை கவிஞர் “ஷெல்லிதாசன்” அவர்கள் தலைமையேற்று பேராசிரியர் கைலாசபதி உருவாக்கிய இலக்கியவாதிகள் பற்றி உரையாடினார்

வரவேற்புரைதனை கனக.தீபகாந்தன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் சிறப்புரைதனை பேராசிரியர் பால சுகுமாரன் நிகழ்த்தினார்.. பேராசிரியர் கைலாசபதி உருவாக்கியோரில் தானும் ஒருவராக இருப்பதில் பெருமையடைவதோடு அவரிற்காக இக்கட்டுரை தொகுப்பானது ஓர் முன்னோட்டமே என உரையாடினார்…

என்றென்றும் கைலாசபதி கட்டுரை தொகுப்பின் கனதியான கட்டுரை பற்றிய காத்திரமான நயவுரைதனை தில்லைநாதன் பவித்திரன் அவர்கள் சிறப்புற வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த “சிறுகதை மஞ்சரி” ஆசிரியர் கரவை மு.தயாளன் அவர்கள் பேராசிரியர் கைலாசபதியின் மனிதநேயப் பண்புகள் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் அன்பின் பாதையின் நிறுவுனருமான றொசில்டா அன்டோ நிகழ்வில் கலந்து சிறப்பித்தோருக்கும் நிகழ்வை ஒழுங்கமைக்க உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்..

இந்நிகழ்வை சுவைபட தொகுத்து வழங்கியிருந்தார் எழுத்தாளர் இராவண தமிழிச்சி….

நிகழ்வானது இனிதே 5.45 மணியளவில் நிறைவடைந்தது..

பேராசிரியர். பால சுகுமாரன்