ஓராண்டு நிறைவில் எண்ணம்போல் வாழ்க்கை
அன்பின் பாதையின் “எண்ணம்போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றமானது தனது கலை இலக்கியப் பயணத்தில் ஓராண்டினை நிறைவுசெய்யும் தருணத்தில் எம் இலக்கியச் செயற்பாடுகளும் எம்மோடு பயணித்தவர்களின் பலரினதும் மீள்பார்வையை நினைவுபடுத்துவதில் பெருமிதமடைகின்றோம்..
நிறைவுறும் இவ்வாண்டு எமக்கு பல சிறந்த உறவுகளை தந்துவிட்டுச் செல்கிறது……. நாம் ஆண்டுகளை எண்ணி முடிப்பதற்குள் ஆயுள் நிறைவுக்கு வந்துவிடும்.
இனிவரும் ஆண்டிலும் நம் உறவுகளின் பிணைப்பை பலப்படுத்தி பிரிவினைகளை களைந்து ஒற்றுமையாய் பயணிக்க உங்கள் கரங்களைப் பற்றிக் கொள்ளக் காத்திருக்கின்றோம்…