“மாதர் மணிச்சுடர்” – பெண்மையைப் போற்றுவோம்.
அன்பின் பாதை சமூகத்தின் மாதர்களை கௌரவிக்கும்
நிகழ்வு 01:04:2023 ஞாயிறு குளகோட்டம் மண்டபத்தில் 3:00 மணி மாலை வேளையில் ஆரம்பமானது.
அதிபர் திருமதி.சுஜாந்தினி யுவராஜா தலைமையில்……….
சிறப்பு விருந்தினராக அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல்
மதிப்பிற்குரிய அழைப்பாளராக திருமதி முரளிதரன் செயலாளர் சுகாதார அமைச்சு கிழக்கு மாகாணம், திருமதி ஜெ. ஸ்ரீபதி பிரதேச செயலாளர் தம்பலகாமம்,
திருமதி இந்திரமதி தேவநாயகம் வைத்திய அதிகாரி தள வைத்தியசாலை கிண்ணியா ,செல்வி ஐஸவர்யா சட்டதரணி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அன்னையரை போற்றி அவர்களின் சாதனைகளை புத்தகவடிமாக்கி மகிழ்வித்த அன்பின் பாதை சமூகம் பெருமை கொள்கின்றது.
நிகழ்வு முடியும் வரை அனைவரும் மகிழ்வுடன் மண்டபத்தில் அமர்ந்திருந்தமை கண் கொள்ளாக்காட்சி…….
ஆயர் அவர்கள் உரையாற்றும் போது
பெண்ணால் சாதிக்க முடியும் என்கின்ற துணிவே அவர்களை சாதனை பெண்களாக உயர்த்துவதாக ஆசி கூறினார்கள்.
திருமதி முரளிதரன் அவர்கள் உரையாற்றும் போது மேடையில் ஏற்றியவர்களையே ஏற்றாமல் புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்திய நிகழ்வாக அமைந்ததையிட்டு மகிழ்வதாக கூறினார்கள்.
திருமதி.ஸ்ரீபதி அவர்கள் உரையாற்றும் போது தனது தந்தை தனது தாயை மகிழ்விக்கும் இத்தருணத்தை பெருமையாக கருதுவதாகவும்,சிறுவர்களை பராமரிப்பதில் பெரியவர்கள் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
கனடா ஸ்ரீரஞ்சினி அவர்களின் *ஒன்றே வேறே*
நூல் வெளியீடும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பலருக்கு அன்பின் பாதை சமூகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
புலம்பெயர் உறவுகளான கனடா வாழ் எனது அன்பு அண்ணா கண்ணா அவரது அப்பா அம்மா நினைவாக நினைவுச் சின்னத்திற்கு அனுசரணையாளராகவும், கனடா வாழ் மற்றுமொரு சகோதரன் கஜன் அவர்கள் தனது தந்தை நினைவாக பெண்மையை போற்றுவோம் புத்தகமாக்க அனுசரணையாளராவும் உதவினார்கள்.
சிற்றுண்டி வழங்கிய லண்டன் வாழ் சீறீதரன் மற்றும் ஆச்சி சுவையூற்று அவர்களுக்கும் நன்றிகள்.
ஔி ,ஒலி வடிவமைப்பு செய்து தந்த தீபன்ணா, திரு.யோகானந்தன் சேர் ,அபிசன் ரகுராம், அபிநயா ரகுராம் அவர்களுக்கும் நன்றிகள்.
செல்வி.ஐஸ்வர்யா சிவகுமார்சட்டதரணி, ரமணன் சேர் பொது சுகாதார பரிசோதகர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு எனது சகோதரன் ராஜா ஏகாம்பரம் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
குத்துவிளக்கு ஆயத்தம் செய்த சுஜீ அவர்களுக்கு நன்றிகள்.
இந் நிகழ்வு சிறப்புற காரணமாக அமைந்த பெரியோர்கள் , கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.
சமூகத்தின் தேவைகள் அறிந்து தேடிச் சென்று உதவிகள் செய்வதுடன் அவர்களை முன்னேற்ற தேவையான செயற்பாடுகளிலும்
அன்பின் பாதை சமூகம்
என்றும் உறுதுணையாக இருப்பார்கள்.