திருகோணமலையில் நடைபெற்ற எனது பறையொலி மற்றும் சியாமளா மகேஸ்வரன் அவர்களின் மனதின் வடிவம் ஆகிய இரு சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் சில நிகழ்வுகள்…

இலக்சுமி பிரசுராலயத்தின்” வெளியீட்டில் உருவான இரு சிறுகதை நூல்கள்கள் பறையொலி[அலெஸ் பரந்தாமன்],மனதின் வடிவங்கள் [ சியாமளா யோகேஸ்வரன்] வெளியீட்டு விழாவானது பிறக்கும் தமிழ் புத்தாண்டான சோபகிருது வருடத்தில் முதற் சிறப்பு நிகழ்வாக “அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றத்தால் நேற்று 15:04:2023 பொது நூலக கேட்போர் கூடம் திருகோணமலையில் நடாத்தப்பட்டது.திரு ஷெல்லி தாசன் ஐயா அவர்களின் தலைமையில் நிகழ்வு நடாத்தப்பட்டது.

முதன்மை அழைப்பாளராக திருமதி.க.உதயராஜா[ மாவட்ட கூட்டுறவு ஆணையாளர்]திருகோணமலை. சிறப்பு அழைப்பாளர் திரு க.அன்பழகன் [சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர்]

நூல்களின் நயவுரை பேராசிரியர் செ.யோகராசா அவர்களாலும் [முன்னால் மொழித்துறை தலைவர் கிழக்குப் பல்கலைக்கழகம்] திருமலை மதன் அவர்களாலும்,நிகழ்ச்சி தொகுப்பு கவிஞர் தி. லலிதகோபன் அண்ணா அவர்களாலும்,நன்றி நவிலல் பிரம்மியா,கனக.தீபகாந்தன் [வரேற்பு] அவர்களாலும் நிகழ்த்தப்பட்டன.

முதற் பிரதி வைத்திய அதிகாரி திருகோணமலை திரு.க.யோகராசா தர்ஷிகன் அவர்களுக்கும் சிறப்பு பிரதி வைத்தியர் திரு.ஜெயகந்தராஜா அவர்களுக்கும், திரு. சூசை எட்வேட் அவர்களுக்கும் திருமதி காண்டீபன்{ ஜேர்மனி} யோகம் திலகேஷ் இணைய வானொலி பணிப்பாளர் அவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. திருமலை நவம் சேர், வாசகர்திரு. முரளிதரன் சேர், திரு.வதனரூபன் சேர், திருமதி.யசோதா அக்கா , திரு.டன்சன் யோகம் இணைய வானொலி,ரகுராம் அபிஷிகன்[ புகைப்பட உதவி]என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.