அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கி மன்றத்தின்”புறநானூற்றில் அறம்……”திருகோணமலை திரியாயைச் சேர்ந்த திரு. முருகையா சதீஷ் அவர்களின்(ஆய்வு நூல்) நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் 30:09:2023 இன்று சனி கிழமை 3:45 மாலை திரு.கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

முதன்மை அழைப்பாளராக திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் தலைவர்.திரு.ச.குகதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள்,பெருந்தகைகள், என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.நிகழ்வின் முக்கிய அங்கமான நூல் வெளியீட்டின் வெளியீட்டுரையை அம்மா பதிப்பகத்தின் உரிமையாளர் திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் திருமலை சுந்தா ஐயா அவர்கள் வழங்கினார்கள்.

நூல் வெளியீட்டினை ஊக்குவிக்கும் முகமாக “புறநானூற்றில் அறம்”எனும் ஆய்வு நூலின் முதற்பிரதியைப் ஜெர்மனியை சேர்ந்ததுகள் அமைப்பின் தலைவர் திரு.தியான் அவர்கள் பெற்று சிறப்பித்திருந்தார்கள்.

♦கலாபூஷணம் ஷெல்லிதாசன்

♦சட்டத்தரணி திருமதி ஐஸ்வர்யா பிரசாதனன்

♦சட்டத்தரணி திரு.பு.முகுந்தன்

♦எழுத்தாளர் திரு அ.விமலசாந்தன்

♦எழுத்தாளர் .டி ரவிகாந்தன் ஆகியோர்

நூலின் சிறப்பு பிரதிகளை மனமுவந்து பெற்றுக் கொண்டார்கள்.நூலுக்கான நயவுரையை எழுத்தாளர் மற்றும் முன்னை நாள் அதிபர் திரு.க யோகானந்தம் ஐயா வழங்கினார்கள்.நிகழ்ச்சித் தொகுப்பினை கவிதாயினி திருமதி.சுஜந்தினி யுவராஜ் அவர்கள் வழங்க,ஏற்புரையை நூலாசிரியர் முருகையா சதீஷ் வழங்கினார்கள். முல்லைத்தீவு குமரசுதா நர்த்தன நாட்டிய கலா மன்றத்தின் நடன கலைஞர் கவிஞர்

திரு .சோமையா சுதர்சன் வரவேற்பு நடனத்தை வழங்கிவைத்தார்.நடனம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.திருமதி.சுதாஜினி தீபகாந்தன் அவர்கள்இனிமையான இடைக்கால சினிமா பாடலை பாடினார்கள்.சங்கீதஆசிரியர் திருமதி.ஷோபா அவர்கள்தமிழ்த்தாய் வணக்கத்தை இசைத்தார்.செல்வன்.மோகித் குரூஸ் கடவுள் வாழ்த்து ஆத்திச்சூடி கூறினார்கள்.வழமைக்கு மாறாக மண்டபம் ஆர்வலர்கள்,பெருந்தகைகளால் நிறைந்திருந்தது.

எண்ணம் போல் வாழ்க்கை அமைப்புடன் கைகோர்த்த 96ம் ஆண்டு உவர்மலை விவேகானந்தா பாடசாலை நண்பர்களுக்கு எனது நன்றிகள்.மேலும் எம்மோடு, எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் செயல்பாடுகளில் எம்மை வழி நடத்தி நல்வழிப்படுத்தும் அனைத்து நட்புகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.இந்நிகழ்வு இன்று மகிழ்ச்சி நிறைந்த விழாவாக அமைந்திருந்தது.