கிழக்கில் சிவந்த சுவடுகள்
அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்- திருகோணமலை
சிரேஸ்ர ஊடகவியலாளர் இரா . துரைரெத்தினம் அவர்களின் “ கிழக்கில் சிவந்த சுவடுகள் “ ஆவண நூல் அறிமுக நிகழ்வு திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் 11.11.2023 3.45 இடம்பெற்றது . படுகொலையின் தேசமொன்றில் பல்வேறு காலகட்டங்களிலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் இனச்சுத்தீகரிப்புகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட அகதியாக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதைகளையும் அதே நேரம் அடிக்கடி கிழக்கு மண்ணில் நிகழ்ந்தேறிய அவலங்களையும் ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் வலிகளோடும் கனதியான நினைவுகளோடும் வாழும் இனமொன்றின் கதை இப்படித்தான் இருக்கும் என நூல் முழுவதும் விரவியிருக்கும் சம்பவங்கள் படம்பிடித்திருக்கிறது.