கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இணைந்து நடாத்தும் ஆய்வரங்கம் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் 02.12.2023 சனிக்கிழமை (02) இடம்பெற்றது. “இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னரான கிழக்கிலங்கையின் இலக்கிய செல்நெறி” எனும் தலைப்பின் கீழ் இவ் ஆய்வரங்கு இடம்பெற்றது.

இவ் ஆய்வரங்கில் திறனாய்வுத் துறையின் செல்நெறி ,கவிதை துறையின் செல்நெறி , நாவல்துறையின் செல்நெறி ,மொழி பெயர்ப்புத்துறையின் செல்நெறி ,சிறுகதைத் துறையின் செல்நெறி ,பெண் எழுத்துக்களின் செல்நெறி, இலக்கியத்தில் நவீன தொழில்நுட்பத்தின் செல்வாக்கு, ஆய்வு பகிர்வின் நோக்கு உள்ளிட்ட தலைப்புக்களில் இவ் ஆய்வரங்கு இடம்பெற்றது. இவ் ஆய்வரங்கமானது வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், கவிதாயினிகள் பங்குபற்றியிருந்தனர்.