அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில்  காலை 26.12.2023 தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் 9.30.இற்கு ஆரம்பமான “மனித வாழ்வை செம்மைப்படுத்துவது பழமையா? நவீனமா? எனும் தலைப்பின்கீழ் விவாதம் நடைபெற்றது இதில் தி/மெதடிஸ்த மகளிர் கல்லூரி பழமைதான் எனவும் தி/விவேகானந்தா கல்லூரி புதுமைதான் எனவும் வாதிட்டனர். தி/மெதடிஸ்த மகளிர் கல்லூரி சார்பில் மாணவிகள் சு.அபிலக்ஷி்கா,வ.கபிசாலி,யா.மு.பா.ரணா ஆகியோரும் தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி சார்பில் சு.துர்ஷா,ச.லக்ஷ்ன்,சி.கம்ஷிகா ஆகியோரும் விவாதித்தனர்.இவ்விவாதத்தின் நடுவர்களாக திரு.க.யோகானந்தன்,திரு.S.R.தனபாலசிங்கம்,திரு.அ.விமலஷாந்தன் ஆகியோர் பணியாற்றினர்.நிகழ்வில் பிரதம அதிதியாக திரு உமாகரன் இராசையா கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வை தரக்கூடிய அறிவுரைகளை தம் தெளிந்த பேச்சின் மூலம் வழங்கினார்.

நிகழ்வில் இரு கல்லூரிகளின் மாணவர்கள் சிலரும் பெற்றோர் மற்றும் ஆர்வலர்களுன் ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் தி/மெதடிஸ்த பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி.சுபத்திரா ஜோன் தேவதாஸ் அவர்கள் நிகழ்வில் இறுதிவரை கலந்துகொண்டு நன்றியுரையும் வழங்கினார். வெற்றியீட்டிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சான்றிதழும் இலக்கிய நூல் ஒன்றும் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்களுக்கான இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என அனைவராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.நிச்சயமாக மாணவர்களுக்கான இவ்வாறான நிகழ்வுகள் 2024 முதல் அதிகளவில் நடைபெறும் என்பதனை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.எனினும்கல்விசார் சமூகமும் மாணவர்களும் எம்மோடு இணைய வேண்டும்…