“கடவுள்தான் அனுப்பினாரா?”
அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் 20.01.2024 மாலை 4.00 – 6.00 மணிவரை நடைபெற்ற ஈழத்தின் பெயர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் ஒருவரான ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா?” சிறுகதை நூல் அறிமுக நிகழ்வானது திருகோணமலை நகராட்ச்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வானது எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருகோணமலையின் சிசேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஓய்வுநிலை அதிபர் திருமலை நவம் அவர்கள் கலந்து சிறப்பித்தார் சிறப்பு அதிதியாக நூலாசிரியரின் மாணவரும் சமூக ஆர்வலருமான திரு. வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரனும் கலந்து சிறப்பித்தார். மேலும் நூலின் சிறப்புப் பிரதிகளை சிரேஷ்ட சட்டத்தரணி சுபாசினி சித்திரவேலு இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் திரு. க.பிரபாகரன் அவர்களும் LYCA குழுமம், Ben Holdind pvt ltd இன் நிதிக் கணக்காளர் திரு.தயாளலிங்கம் பிரசாதனன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். நூலின் அறிமுகத்தினையும் நயவுரையையும் எழுத்தாளரும் ஆசிரியருமான திரு. தில்லைநாதன் பவித்திரன் சிறப்புற வழங்கினார். நிகழ்வினை செல்வி அபிநயா ரகுராம் சுவைபட தொகுத்து வழங்கினார். மேலும் அன்பின் பாதை றொசில்டா அன்டன் நன்றியுரைதனை வழங்கினார். நிகழ்வின் சிறப்பம்சமாக சீனன்குடாவைச் சேர்ந்த அறநெறி பாடசாலை ஒன்றினை சேர்ந்த சிறார்கள் சிலருக்கு பாடசாலை புத்தகப்பை மற்றும் அப்பாயாசக் கொப்பிகளும் எழுத்தளரால் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.