“மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா
அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் (02.03.2024) திருகோணமலை நகராட்ச்சி மன்ற பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வினை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையேற்று நடாத்தினார்.
பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்ச்சி மன்றத்தின் செயலாளர் திரு.வெ.இராஜசேகர் கலந்து சிறப்பித்திருந்தார்.சிறுகதை நூலின் அறிமுகத்தை செல்வி அ.தர்சிகா வழங்கினார்சிறுகதை நூலின் நயவுரைதனை ஓய்வுநிலை அதிபரும் எழுத்தாளருமான திரு.க.யோகானந்தன் அவர்கள் சிறப்புற வழங்கினார்.நிகழ்வில் சிறப்பம்சமாக நூல்வெளியீட்ட.ல் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து வாசகர்களுக்கும் சிறுகதை நூலானது அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் எழுத்தாளர் தில்லைநாதன் பவித்ரன் “திருமலையின் சமகால இலக்கியம்” பற்றி வெளிப்படையான சிற்றுரையொன்றை வழங்கினார்.நிகழ்வினை செல்வி அபினயா ரகுராம் தொகுத்து வழங்க, நிகழ்வினை றொசில்டா அன்டன் சிறப்புற ஒழுங்கமைத்து வழங்கியிருந்தார்.கவிஞர் செல்லிதாசனின் நன்றியுரையுடன் நிகழ்வானது 5.30 மணியளவில் நிறைவுபெற்றது.