தேயும் நிலவு கேட்டது
காயும் நதியே
பெண்மைக்கு உவமை எதுவென
சலசலத்தோடும் ஆறு
பளீரென ஒளிரும் தண்மதி
இவையே பெண் என்றது நதி
வெடித்து கிடந்த நிலம் சிரித்தது
பசுமையாய் பொறுமையாய்
இருந்தால் தான் மதிப்பு
பொலிவிழந்து வறண்டு
குறையாய் வெறுமையாய்
கிடந்தால் போற்றுவாரில்லை என்றது
குழம்பிய நிலா கேட்டது
நதியில் என்ன வேற்றுமை
நிலவில் என்ன பேதம்
பூமியில் என்ன வித்தியாசம்
உண்மை எது என
நதி சொன்னது
கவிதைக்கு பொய் அழகு

அருவி